
ஜெயலலிதா சமாதிக்கு சென்று ஒ.பி.எஸ்சும் ஜெ.தீபாவும் அஞ்சலி செலுத்திவிட்டு நேராக ஒ.பி.எஸ்ஸின் அரசு இல்லமான தென்பெண்ணைக்கு வந்தனர். அங்கு ஒ.பி.எஸ்ஸின் மனைவி விஜயலட்சுமி அவரது மருமகள் ஆகியோர் தீபாவிற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதனால் ஓ.பி.எஸ்சும் ஜெ.தீபாவும் இணைந்து செயலாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதால் தீபாவிற்கு அதிக பவ்யம் காட்டி மரியாதை செய்தார் ஓ.பி.எஸ்.
பின்னர் ஓ.பி.எஸ் வீட்டின் உள்ளே சென்ற தீபா, பன்னீர்செல்வம் மதுசூதனன், மைத்ரேயன், முனுசாமி, பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இரவு உணவும் தீபா ஒ.பி.எஸ் குடும்பத்தினருடன் எடுத்துகொண்டார் என கூறப்படுகிறது.
பின்னர் ஒ.பி.எஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீபா மக்களின் நலனுக்காகவே அரசியல் களத்தில் குதித்ததாகவும் இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார்.