
சொத்துகுவிப்பு வழக்கில் காலை பத்து மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ஒட்டுமொத்த இந்தியாவே என்ன நடக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தது.
சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகள் தங்கிருக்கும் வீடு போயஸ் கார்டனில் உள்ளதால் ஏராளமான சசிகலா ஆதரவு தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர்.
சரியாக 10.30 மணியளவில் அனைவரும் பதற்றத்தோடு காத்திருந்த நிலையில், யாரோ ஒரு அவசர கோளாறு தொண்டர் சசிகலா விடுதலை என கொளுத்தி போட்டு விட்டார்.
பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தலைகால் புரியாமல் குதிக்க தொடங்கி விட்டனர். இதைபார்த்த போயஸ்கார்டன் வாசிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
அப்போதுதான் தலைகால் புரியாமல் ஆடிகொண்டிருந்த தொண்டர்கள் சற்று நிதானமாகி தனது நண்பர்களிடம் தொலைபேசியில் விசாரிக்க தொடங்கினர்.
பின்னர் உண்மை தெரிந்தபின் ஒருவர் பின் ஒருவராக வந்த வழி தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.