
ஜெயலலிதா பிறந்த நாளான கடந்த 24ஆம் தேதி அவரது அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.
சென்னை தியாகராய நகரில் இருக்கும் தீபாவின் இல்லம் முன்பு ஆயிரகணக்கான தொண்டர்கள் திரண்டு அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தீபா எம்.ஜி.ஆர், அம்மா, தீபா பேரவை என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி அதற்கான கொடியையும் அறிமுகபடுத்தி, கட்சி அலுவலகத்தையும் திறந்து வைத்தார்.
இந்நிலையில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார் தீபா.
அதில் பேரவை தலைவர் ஆர்.சரண்யா என்றும், மாநில செயலாளர் ஏ.வி.ராஜா என்றும் பொருளாளர் ஜெ.தீபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.