
வனத்துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் தொகுதிக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சசிகலாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவராக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன்.
நீண்ட காலம் ஜெ.வால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அவர் சசிகலாவின் எதிரியாகி போன நத்தம் விஸ்வநாதனை ஒழிக்க களமிறக்கபட்டவர்.
இவர் திண்டுக்கல் தொகுதியில் திமுக நகர செயலர் காதரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
கடைசி நேர கவனிப்புகளால் தோல்வியின் விளிம்பில் இருந்த சீனிவாசன் உள்ளூரில் அதிக செல்வாக்குள்ள திமுக வேட்பாளரை வீழ்த்தினார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவாசனும் விதிவிலக்கல்ல.
கூவத்தூர் சிறை வாசத்துக்கு பிறகு முதன்முறையாக நேற்று தன் தொகுதிக்கு சென்றார் சீனிவாசன்.
சீனிவாசன் தன் அரசியல் வாழ்கையில் கண்டிராத அளவுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள் அவரது தொகுதி வாசிகள்.
ஊருக்குள் வாரதே என கோஷமிட்டு காரிலிருந்து இறங்கிய அவரை கேரோ செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் சுதாகரிப்பதற்குள் ஒரு குழுவினர் அவர் மீது முட்டி மோதினர்.
ஒருவர் அவர் வேட்டியை பிடித்து இழுத்தார்.இதனால் பதறி போன சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சீனிவாசனுடைய கார் டிரைவரை நோக்கி காரை எடுத்து வருமாறு கத்தினர்.
பொதுமக்களிடம் எதிர்ப்பு இருக்குமென சீனிவாசன் எதிர்பார்த்த நிலையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடும் அதிர்ச்சிக்கு ஆளானார்.
பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் விட்டால் போதும் என ஓட்டம் பிடித்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் நம்பர் 2 ஆக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கிடைத்த வரவேற்பை கண்டு அதிமுக வட்டாரமே அதிர்ச்சி அடைந்துள்ளது.