PM Modi: நான் ரெடி நீங்க ரெடியா... தடாலடி மோடி.. செய்தியாளர்களிடம் அதிரடி..! |

By vinoth kumarFirst Published Nov 29, 2021, 11:32 AM IST
Highlights

உருமாறிய புதிய வகை கொரோனா தொடர்பாக நாம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பொதுமக்களுக்கு பிதரமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.  அடுத்தாண்டு மார்ச் வரை இலவச ரேசன் பொருள் வழங்கப்படுவது என பிரதமர் தெரிவித்துள்ளார். 

அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், நாடாளுமன்றத்தில் அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லியில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறுவது, எரிசக்தி சேமிப்பு திருத்தமசோதா, மின்சார திருத்த மசோதா, கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை மசோதா உள்ளிட்ட 26 புதிய மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி;-  நாட்டின் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவாக்கப்பட வேண்டும். அதற்காக இந்த கூட்டத்தொடர் முக்கியமானதாகும். அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். மிக முக்கியமான ஒரு கூட்டத்தொடரில் ஆக்கபூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

அனைத்து பிரச்னைகள் தொடர்பாகவும் விரிவாக விவாதிக்க தயாராக உள்ளோம். ஆனால், நாடாளுமன்றத்தில் அவமரியாதை செய்யாத வகையில் அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும். எதிர்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 150 கோடி டோஸ் தடுப்பூசி என்னும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறோம்.  உருமாறிய புதிய வகை கொரோனா தொடர்பாக நாம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பொதுமக்களுக்கு பிதரமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.  அடுத்தாண்டு மார்ச் வரை இலவச ரேசன் பொருள் வழங்கப்படுவது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

click me!