
சாதி வெறி பிடித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் தலை துண்டிக்கப்படும் என கொலை மிரட்டல் விடுத்து பதிவிட்ட திமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்புற உள்ளது தேர்தல் நடைபெற்றது. அதில் கடலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், பாஜக மற்றும் பாமக தலா 1 இடங்களிலும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். திமுக சார்பில் கடலூர் மாநகராட்சியில் முதல் பெண் மேயர் வேட்பாளராக கே.எஸ்.ராஜாவின் மனைவி சுந்தரி அறிவிக்கப்பட்டார். ஆனால், தலைமை அறிவிக்கப்பட்ட மேயர் வேட்பாளருக்கு எதிராக திமுகவின் கடலூர் மாவட்ட பொருளாளர் மனைவி கீதா குணசேகரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு வழியாக பெரும்பாடுபட்டு மேயர் தேர்தலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் சுந்தரி வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க;- திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இப்படி நடக்குது.. மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த TTV..!
கொலை மிரட்டல்
இந்த குழப்பத்திற்கு எல்லாம் காரணம் கடலூர் எம்எல்ஏ ஐய்யப்பன்தான் என்பது தெரியவந்ததையடுத்து திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரியின் கணவரும் கடலூர் நகர தி.மு.க. செயலாளரும் ஆன கே.எஸ்.ராஜா புதுநகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பற்றி கடலூர் எஸ்.என்.சாவடி டி.எஸ்.ஆர். நகரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் முகநூலில் அவதூறாக கருத்துகைடிள பதிவிட்டு வருகிறார். அவர் மீது போலீசார் உடனடியாக சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
திமுக பிரமுகர் கைது
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில் பேஸ்புக்கில் மாவட்டக் கழகத்தை வீணாக்கிய சாதி வெறி பிடித்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலை துண்டிக்கப்படும். எம்ஆர்கே அழிவின் ஆட்டம் ஆரம்பம் எனவும் முரளி கிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அவதூராக அவர் பதிவு செய்து வந்துள்ளார். இதனை ஆதாரத்துடன் போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து திமுக பிரமுகரான முரளிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.