சாத்தான்குளம் தந்தை மகன் மரணம். செல்போன் கொடுக்காததால் போலீசார் நடத்திய கொடூரம் எனத்தகவல். ரூ10லட்சம் நிவாரணம்

By T BalamurukanFirst Published Jun 24, 2020, 8:46 PM IST
Highlights

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி எடுத்துள்ளது.

 ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும்  கைது செய்தது சாத்தான்குளம் போலீஸ்.அவர்கள் காவல் நிலையத்தில் வைத்து கால்கள் கட்டப்பட்டும் தலைகீழாக தொங்கவிட்டும் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டது.அதனால் அவர்கள் மரணம் அடைந்ததாகவும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.சப்இன்ஸ்பெக்டர்கள் தலைமைக்காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளத்தில் இந்த மரணம் குறித்து மனித உரிமை அமைப்புகள் ஆய்வு நடத்தியதில்..' கடந்த மாதம் இவர்கள் கடைக்கு வந்த போலீசார் செல்போன் கேட்டதாகவும் அவர்கள் கொடுக்க மறுத்ததால் தான் இந்த முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த முன்பகை காரணமாகத்தான் கடையடைக்க காலதாமதம் ஏற்பட்டதாக சொல்லி போலீசார் பென்னிக்ஸ் தாக்கப்பட்டிருக்கிறார். 

இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. அப்போது, "தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காணொலி மூலம் இன்று மதியம் 12.30 மணிக்கு தமிழக டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது".

இந்நிலையில். கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் "உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்தது தொடர்பாக நீதித்துறை நடுவர் பிரேத புலன்விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், நீதித்துறை நடுவரின் அறிக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.  

click me!