பிராமணரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய உதவிய இஸ்லாமியர்கள்..!! கொரோனா நெருக்கடியில் ஒரு நெகிழ்ச்சி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 24, 2020, 6:38 PM IST
Highlights

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் பகுதி தலைவர் அஹமது அலி அவர்களிடம் அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலுக்கு கொரோனா அச்சத்தால் இறுதிசடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், அந்த உடலை கண்ணியமான முறையில் சுடுகாடு வரை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்ய இஸ்லாமிய சமூகத்தினர் உதவியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தையும் கடந்துள்ளது இன்னும் ஒரு சில வாரங்களின் உலக அளவிலான நோய்த் தொற்று 1 கோடியை எட்டக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தனது கொடூர முகத்தை காட்டி வருக்கிறது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .சுமார் 14,505 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே வைரஸ் பாதிப்பில்  தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

அன்றாடம் கொத்துக் கொத்தாக மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர், உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மனிதகுலம் கண்டிராத இந்த பேரிழப்பு காலத்தில் ஆங்காங்கே மனதை நெகிழவைக்கும் மனிதநேய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலுக்கு கொரோனா அச்சத்தால் இறுதிசடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், அந்த உடலை கண்ணியமான முறையில் சுடுகாடு வரை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்ய இஸ்லாமிய சமூகத்தினர் உதவியிருப்பது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23.06.2020 அன்று காலை விழுப்புரம் மாவட்டம் பெரம்பை பகுதியில் பிராமணச் சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தார், அவரின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்டிருந்ததால், அவர்களாலும் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய இயலவில்லை. 

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் பகுதி தலைவர் அஹமது அலி அவர்களிடம் அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தன்னார்வலர்கள் உடன் சென்று, உரிய முறையில் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்து, இறந்த அந்த பிராமணரின் உடலை அவரது வீட்டிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, பின் கண்ணியமான முறையில் தகன மேடை வரை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்ய உதவினர்.தமிழக பகுதியான பெரம்பை புதுச்சேரிக்கு மிக அருகில் இருப்பதால், புதுச்சேரி பகுதியைச் சார்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சியை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த சேவையை இணைந்து செய்தனர். சாதி, மத பேதமின்றி கொரோனா மக்களை தாக்கி வரும் அதேவேளையில் மனிதநேயத்துக்கும் சாதி மத பேதேமில்லை என்பதை இந்த சம்பவம் உணர்ந்தியுள்ளது.  
 

click me!