அதிமுகவை நாயோடு ஒப்பிட்ட தயாநிதி மாறன்... அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்..!

By vinoth kumarFirst Published Dec 14, 2019, 4:36 PM IST
Highlights

பா.ஜ.க.வின் காலடியில் விழுந்து கிடப்பதால், அந்த மசோதா வெற்றி அடைந்ததால் சிறுபான்மையினருக்கு எதிராக மாறியிருக்கிறது. தங்களுடைய எஜமானர்களுக்கு சேவை செய்கின்ற நாயை விட கேவலமான அ.தி.மு.க அரசு செயல்பட்டிருக்கிறது. இந்தியாவில் நிலவிவரும் மோசமான பொருளாதார நிலையை மறைப்பதற்காக இதுபோன்ற சட்டங்களை கொண்டு வருகின்றனர்.

குடியுரிமை மசோதாவுக்கு வெட்கமே இல்லாமல் கூஜா தூக்குகின்ற அதிமுக அரசு அவர்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது என திமுக எம்.பி. தயாநிதி மாறன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை இஸ்லாமிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியா வந்துள்ள இந்துக்கள், புத்தர்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள் உள்பட ஆறு சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களையும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவரும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. 

இந்நிலையில், நேற்று குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டு நந்தனத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அவர்களை நேரில் பார்த்து திமுக எம்.பி.தயாநிதி மாறன் மற்றும் எம்.எல்.ஏ.சேகர் பாபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தயாநிதி மாறன்;- திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நேற்று அமைதியான முறையிலேயே நேற்று சிறப்பான ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் இந்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், வெட்கமே இல்லாமல் கூஜா தூக்குகின்ற அதிமுக அரசு அவர்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளனர். அவர்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் இந்த தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேறி இருக்காது. சிறுபான்மையினரின் உரிமை மீட்கப்பட்டிருக்கும் என்றார். 

ஆனால் இவர்கள் பா.ஜ.க.வின் காலடியில் விழுந்து கிடப்பதால், அந்த மசோதா வெற்றி அடைந்ததால் சிறுபான்மையினருக்கு எதிராக மாறியிருக்கிறது. தங்களுடைய எஜமானர்களுக்கு சேவை செய்கின்ற நாயை விட கேவலமான அ.தி.மு.க அரசு செயல்பட்டிருக்கிறது. இந்தியாவில் நிலவிவரும் மோசமான பொருளாதார நிலையை மறைப்பதற்காக இதுபோன்ற சட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த சட்டத்தை கொண்டு வருவதால் என்ன பயன்? இந்தியா முன்னேறி விடப் போகிறதா? மக்களிடையே பிரிவினையை உருவாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட வைக்க முயற்சிக்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்ததன் மூலம் இந்தியாவே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

click me!