செய்த தொழிலை வெளியே சொல்ல முடியாத தயாநிதி எந்த ஒதுக்கீட்டில் ஆசிய பணக்காரர் ஆனார்..? ஷ்யாம் கிடுக்குப்பிடி..!

By Thiraviaraj RMFirst Published May 15, 2020, 3:51 PM IST
Highlights

வேளாண் குடியை சார்ந்த நாங்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் படித்து மருத்துவராகி இருக்க முடியாதாம். ஆனால் செய்த தொழிலை வெளியே சொல்ல முடியாதவர்கள் ஒரே தலைமுறையில் ஆசிய பணக்காரர்களாம். 

வேளாண் குடியை சார்ந்த நாங்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் படித்து மருத்துவராகி இருக்க முடியாதாம். ஆனால் செய்த தொழிலை வெளியே சொல்ல முடியாதவர்கள் ஒரே தலைமுறையில் ஆசிய பணக்காரர்களாம். அது எந்த ஒதுக்கீடோ? என புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார். 

தி.மு.க. எம்.பி-க்களான தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். இந்த மனுக்களை கொடுத்துவிட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?", என்று கூறியுள்ளார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு, உயர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஜாதி வெறி எண்ணம் அவரது மனதில் ஊன்றி இருப்பதையே காட்டுவதாக பலரும் கருதுகின்றனர். தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’வேளாண் குடியை சார்ந்த நாங்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் படித்து மருத்துவராகி இருக்க முடியாதாம். ஆனால் செய்த தொழிலை வெளியே சொல்ல முடியாதவர்கள் ஒரே தலைமுறையில் ஆசிய பணக்காரர்களாம். அது எந்த ஒதுக்கீடோ? எங்கள் மூதாதையர்கள் விவசாயம் மட்டுமே செய்தவர்கள்.

வேளாண் குடியை சார்ந்த நாங்கள் இட ஒதுக்கீடு இல்லாமல் படித்து மருத்துவராகி இருக்க முடியாதாம்...

ஆனால் செய்த தொழிலை வெளியே சொல்ல முடியாதவர்கள் ஒரே தலைமுறையில் ஆசிய பணக்காரர்களாம்...
அது எந்த ஒதுக்கீடோ?

— Shyam Krishnasamy (@DrShyamKK)

 


தயாநிதி மாறனின் மூதாதையர்கள் செய்த தொழில்? ஆனால் எங்களுக்கு இன்றும் SCஎன்ற இழிவு, தயாநிதிகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. ஒரே காரணம்- நாங்க SCயில் இருக்கிறோம், அவர்கள் சாதி பெயரை மாற்றி SCஅல்லாத வகுப்பில்...தாழ்த்தப்பட்டோர் போல ஒரு நிமிடம் நடத்தியதற்கே தயாநிதிகளுக்கு இந்த கொதிப்பு. அப்போ இட ஒதுக்கீடு ‘பிச்சை’போடுகிறோம் என்று நிரந்தரமாக இதே தாழ்த்தப்பட்ட நிலையில் SC,தலித், ஹரிஜன் என்று வைத்திருக்க நினைக்கும் போது எங்களுக்கு எப்படி இருக்கும்?

எங்கள் மூதாதையர்கள் விவசாயம் மட்டுமே செய்தவர்கள்...
தயாநிதி மாறனின் மூதாதையர்கள் செய்த தொழில்?

ஆனால் எங்களுக்கு இன்றும் SC என்ற இழிவு, தயாநிதிகளுக்கு அது என்னவென்றே தெரியவில்லை.

ஒரே காரணம்- நாங்க SCயில் இருக்கிறோம், அவர்கள் சாதி பெயரை மாற்றி SC அல்லாத வகுப்பில்...

— Shyam Krishnasamy (@DrShyamKK)

 

SCயில் இருந்து வெளியேறியே தீர்வோம்!! You people’என்பதற்கு அர்த்தம் தெரியாத தயாநிதி மாறன் ஒரு MPயாக இருக்கவே தகுதியற்றவர்.
அதை மூன்றாம் தரம் என்றும் தாழ்த்தப்பட்டவர் என்றும் பொருள் கொடுத்தது தர்குறித்தனம்’’எனத் தெரிவித்துள்ளார்.

click me!