வராத தயாளு அம்மாள் வந்தார்... காவேரி மருத்துவமனையில் பரபரப்பு!

Published : Aug 06, 2018, 02:12 PM ISTUpdated : Aug 06, 2018, 02:13 PM IST
வராத தயாளு அம்மாள் வந்தார்... காவேரி மருத்துவமனையில் பரபரப்பு!

சுருக்கம்

கோபாலபுரம் இல்லத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி முதல்முறையாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியை பார்ப்பதற்காக அழைத்துவரப்பட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததாக அறிக்கை வெளியானது.

 மீண்டும் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்தாலும், வயது முதிர்வுக்கு உள்ள பிரச்சனையால் இருக்கும் கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிக்கையில் கூறியிருந்தனர். 

இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லீரல் செயல்பாடுகள் குறைந்தன் காரணமாக மஞ்சள் காமாலை வந்துள்ளது. மஞ்சள் காமாலை தாக்கத்தால் தட்டணுக்கள் (Platelets) எண்ணிக்கையும்  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ரத்த நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான தட்டணுக்கள் குறைந்து வருவதால், அவருக்கு கொடுக்கப்படும் மருந்துகளும் தாமதமாகவே வேலை  செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

கோபாலபுரம் இல்லத்தில் இருந்த,  திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி காவேரி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.  கருணாநிதி போயன்படுத்தும் பிரத்யேக வாகனத்தில் தயாளு அம்மாவை அழைத்துவரப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை வராத தயாளு அம்மாள் முதல்முறையாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். தயாளு அம்மாவுடன் முக தமிழரசு, தயாநிதி அழகிரி மற்றும் அருள்நிதி உள்ளிட்டோரும் உடன் வந்துள்ளனர். இதற்கு முன்னதாக கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் வந்துள்ளதால் காவேரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!