கருணாநிதி உடல்நிலை; குறையும் தட்டணுக்கள்! டாக்டர்கள் குழு அவசர ஆலோசனை...

First Published Aug 6, 2018, 1:05 PM IST
Highlights

கருணாநிதி  உடல்நிலை சீராகி வந்த நிலையில் மஞ்சள் காமாலை வந்திருப்பதால் ரத்த . நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான தட்டணுக்கள் குறைந்து வருவதால்  சீரியசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததாக அறிக்கை வெளியானது.

மீண்டும் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்தாலும், வயது முதிர்வுக்கு உள்ள பிரச்சனையால் இருக்கும் கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று டாக்டர்கள் அறிக்கையில் கூறியிருந்தனர்.  இப்படி தீவிர கண்காணிப்புக்கு இடையில் கல்லீரல் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டதை அறிந்த காவேரி டாக்டர்கள், சென்னை குளோபல் மருத்துவமனையில் கல்லீரல் நோய், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் முகமது ரேலாவை அழைத்து வந்து,  கருணாநிதிக்கு கல்லீரல் நோய்க்கு தொடர்பான சிகிச்சை அளித்தனர்.

இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லீரல் செயல்பாடுகள் குறைந்தன் காரணமாக மஞ்சள் காமாலை வந்துள்ளது. மஞ்சள் காமாலை தாக்கத்தால் தட்டணுக்கள் (Platelets) எண்ணிக்கையும்  கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ரத்த நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான தட்டணுக்கள் குறைந்து வருவதால், அவருக்கு கொடுக்கப்படும் மருந்துகளும் தாமதமாகவே வேலை  செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

சிகிச்சையளிக்கும் நிபுணர்கள் குழு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால்  தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார்களாம். மேலும் கலைஞரின் உடல்நிலை  பின்னடைவு உள்ளதாக வெளியான தகவலால்  சிகிச்சைகள் குறித்த காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கையை இன்று மாலை வெளியாகும் என  தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிர்பார்த்துள்ளனர்.  

click me!