கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை.. பிரதமர் மோடி பெருமிதம்..!

By vinoth kumarFirst Published Sep 26, 2021, 1:24 PM IST
Highlights

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மன் கி பாத்  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்;- பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும், நாம் மிகவும் கொண்டாட வேண்டிய தினம் உலக நதி தினம். உலக நதிகள் தினத்தை கொண்டாடுவதால், செப்டம்பர் மாதம் முக்கியமான மாதமாக உள்ளது. நமக்கு தண்ணீர் வழங்கும் நதிகளுக்கு நாம் அளிக்க வேண்டிய பங்களிப்பு குறித்து நினைவு கூற வேண்டிய நாள். ஆண்டுக்கு ஒரு முறை நதி பண்டிகையை மக்கள் கொண்டாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

நதிநீர் நாட்டிற்கு மிக முக்கியம். அதனை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாதது. நதிகளை தூய்மையாக வைத்து கொள்வது நமது கடமை. நதிநீரை வீணாக்காமல், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். நதிகளை புண்ணியஸ்தலமாக மக்கள் வழிபடுகின்றனர். கங்கை, யமுனை, ஆகிய நதிகள் புனித நீராடும் இடமாக உள்ளது. அந்த நதிகளை மக்கள் கடவுளாக போற்றுகின்றனர். கூட்டு முயற்சியின்  மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது. 

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழக சகோதரிகளின் முயற்சிகளை போன்று இந்தியா முழுவவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி செலுத்துவதில் தினம் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. நமது முறை வரும்போது நாம் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தவேண்டும் என்றார். யாருக்காவது தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களையும் அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தவேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலத்தில் கொரோனா போராட்டத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

click me!