பாமகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. ஜி.கே.மணி அதிரடி அறிவிப்பு..!

Published : Sep 26, 2021, 10:10 AM IST
பாமகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. ஜி.கே.மணி அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்பட்ட காரணத்தினால் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்பட்ட காரணத்தினால் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பட்டாளி மக்கள் கட்சி தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டியைச் சேர்ந்த தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆ.சத்தியமூர்த்தி என்பவர் பட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்பட்டுகிறார்.

அவருடன் பட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!