திமுகவின் உயர்நிலை செயல் திட்டகுழு கூட்டத்திற்கான தேதி திடீர் மாற்றம்.! என்ன காரணம் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published May 19, 2023, 11:55 AM IST

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆலோசனை மேற்கொள்வதற்காக திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம் வருகிற 20 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 


கருணாநிதி நூற்றாண்டு விழா

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி நூற்றாண்டு விழா வருகிற ஜூன் மூன்றாம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, சுமார் அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக திமுக தலைவராக பதவிவகித்துள்ளார். அதேபோல 5 முறை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அவரது நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக மற்றும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜூன் 3-ம் நாள் தொடங்கி,

Latest Videos

திமுக உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டம்

அடுத்த ஆண்டு ஜூன்-3 வரை ஓராண்டு காலம்  கலைஞரின் நூற்றாண்டு விழாவை தொண்டர்களின் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக, கொள்கை விழாவாக, வெற்றி விழாவாக, இந்தியத் திருநாடே திரும்பி பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், திமுக சார்பாக மாவட்ட செயலாளர் கூட்டம் மற்றும் உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் தமிழக அரசு சார்பாகவும் மூத்த அமைச்சர்களோடு ஆலோசனை கூட்டமும் நடைபெற்று வருகிறது.  

 

கர்நாடகவில் பதவியேற்பு விழா

நாளை (20 ஆம் தேதி) திமுக உயர்நிலை செயல் குழு கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் துறை முருகன் ஏற்கனவே அழைப்பு  வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று 20ஆம் தேதி பதவியேற்பு விழாவானது நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதால் திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்திற்கான  தேதி எனது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 21ஆம் தேதி உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி.. அழிந்து வரும் நாட்டு மாடுகளை காக்க என்ன செய்யப் போறீங்க.? ஈஸ்வரன்

click me!