போலீஸ் விசாரணையில் தனபால்.. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஒத்திவைப்பு.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2021, 12:06 PM IST
Highlights

பின்னர் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர், அவர்கள் இருவரையும் 8 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொலை கொள்ளை தொடர்பான ஆதாரங்களை அழித்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ்யின் சகோதரர் தனபாலன் 5 நாட்கள் போலீஸ் காவலில் இருந்து வருவதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் செல்வி.ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் அதில் உள்ள பங்களாவில் கடந்த  2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளி ஒருவரை கொலை செய்து பின்னர் பங்களாவிற்குள் நுழைந்து பல பொருட்களை கொள்ளையடித்தது. 

இந்த சம்பவம் நடந்து முடிந்து 5 ஆண்டுகள் நெருங்கிவிட்டது, அதிமுக ஆட்சியின்போது வழக்கு விசாரணைகள் வேகவேகமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கார் ஓட்டுனர் கனகராஜ் ஆகியரை போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் கார் ஓட்டுநர் கனகராஜ் திடீரென விபத்தில் உயிரிழந்தார். மேலும் இதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் அவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த கார் ஓட்டுநர் கனகராஜ்யின் சகோதரர்களிடம், சயானிடமும் போலீசார் மறு விசாரணை  மேற்கொண்டனர்.அதில் பல்வேறு விதமான அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடமும் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. 

இதையும் படியுங்கள்: அரசு, பல்கலை பேராசிரியர்களின் பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும். அன்புமணி இராமதாஸ்.

இந்நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கனகராஜன் சகோதரர் மற்றும் அவரது சித்தி மகன் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட போலீசார்  கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர். அதாவது கனகராஜ் உயிரிழந்த போது அவர் வைத்திருந்த ஸ்மார்ட்போனை கைப்பற்றிய தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் அதை யாருக்கும் தெரியாமல் பதுக்கி விட்டதாகவும், அதில் கனகராஜ்யுடன் தொடர்பில் இருந்த விஐபிக்கள் தொடர்பான தகவல்கள்  அனைத்தையும் அவர்கள் அழித்து விட்டதாகவும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அது குறித்து கனகராஜன் மனைவியை போலீசில் தெரிவித்த தகவலின்படி இது நிருபனம் ஆகியுள்ளது. சேலம் ஆத்தூரிலிருந்து இருவரையும் நீலகிரி மாவட்டம், சோலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த தனிப்படை, போலீசார் தனபால் ரமேஷ் ஆகிய இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல், உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்: BIG Breaking: ரஜினிக்கு முளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு சரி செய்யப்பட்டது. விரைவில் வீடு திரும்புவார்.

பின்னர் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர், அவர்கள் இருவரையும் 8 தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தனபாலை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க உதகை நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இந்நிலையில் கொடநாடு கொலை  கொல்லை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் போலீஸ் விசாரணையில் இருந்துவருவதால் இன்றைய வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு  ஒத்திவைத்தது நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல் மற்றொரு நபரான தனபாலின் சித்திமகன் ரமேஷ் போலீஸ் விசாரணைக்கு அனுமதி கேட்டு இன்று நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இன்றைய வழக்கு விசாரணைக்கு வழக்கம் போல சயான், வாளையார் மனோஜ் ஆஜர் ஆகி இருந்தனர் ஆஜராகி இருந்தனர். 


 

click me!