
கேரளாவைப் போன்று தங்கள் மாநில கோவில்களிலும் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது.
பிராமண சமூகத்தினர் இல்லாத 36 பேர் இக்கோயில்களில் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக 6 தலித்துக்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
திருவில்லா அருகே முள்ள மணப்புரம் சிவன் கோவிலில் அம்மாநிலத்தின் முதல் தலித் அட்சகராக யது கிருஷ்ணன் என்பவர் அர்ச்சராக தனது பணியை தொடங்கினார்.
நாடு முழுவதும் இந்த நியமன அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. கேரள அரசை பாராட்டி பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் செய்தியாளர்களிடம் பேசி, முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கோவில்களில், தலித்துகளை அர்ச்சகர்களாக நியமிப்பதில் தனக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.
கேரளாவைப் போன்று கர்நாடக அரசுக்கு சொந்தமான கோவில்களிலும், விரைவில் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என சித்தராமையா தெரிவித்தார்.