
நவீன சூப்பர்சோனிக் போர் விமானங்களின் இடி முழக்கங்களுக்கு மத்தியில் இந்திய விமானப்படையின் பழமையும் , வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தை பிடித்துள்ளார் டகோட்டா விமானங்கள் சிறகடித்து பறக்க உள்ளது. இந்திய-பாகிஸ்தான் போரின்போதும், பங்களாதேஷின் விடுதலைப் போரிலும் டக்கோட்டாவின் பங்கு அளப்பரியது.
பங்களாதேஷ் பிரிவினையின்போது டேங்காயில் மற்றும் விமானப்படை வீரர்களுக்கு போக்குவரத்திற்கு பெரிதும் துணை நின்றது டகோட்டா. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1947, 48 இந்தோ பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் டகோட்டா முக்கிய பங்காற்றியது. 1947 அக்டோபர் 26 அன்று காஷ்மீர் மகாராஜா காஷ்மீரை காப்பாற்றும்படி இந்தியாவிடம் உதவி கோரிய போது 1வது சீக்கிய படைப் பிரிவினரை ஏற்றிச்சென்ற மூன்று டக் டடோக்கள்1947 அக்டோபர் 27 அன்று ஸ்ரீநகரில் தரை இறங்கியது. அடுத்த ஒரு வாரம் முழுவதும் காலட்படை பிரிவினரை ஸ்ரீ நகருக்கு கொண்டு செல்லும் மிகப் பெரும் பணியை ஆற்றியது.
டக்கோட்டா. அதாவது ரஷ்யாவின் மிக் ரக விமானமான டக்கோட்டா 1946ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் களமிறக்கப்பட்டது. இவ்விமானம் 1947, 1948, 1971 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஒருகட்டத்தில் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த விமானங்கள், இங்கிலாந்தில் சீரமைக்கப்பட்டு அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. அதற்கு மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனது சொந்த முயற்சியில் பெரும் பொருட்செலவில் விமானங்களை சீரமைத்து இந்திய விமானப்படைக்கு பரிசாக தந்தார். முக்கியப் போர்களில் போக்குவரத்திற்காக பயன்பட்ட இவ்விமானம் கடந்த 1978 ஆம் ஆண்டு விமானப்படையில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இருந்தது குறிப்பிடதக்கது. ராஜீவ் சந்திரசேகரின் முயற்சியால் வரலாற்று சிறப்புமிக்க டகோட்டா கடந்த 2018ஆம் ஆண்டு மீண்டும் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜீவ் சந்திரசேகர் எம்.பி வரலாற்று சிறப்புமிக்க டகோட்டா மீண்டும் இந்திய விமானப்படையில் பறக்க உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அது இந்திய நாட்டிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது. விமானப் படை வரலாற்றில் மற்றும் ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் இந்தக் டகோட்டாவின் பணிகள் வரலாற்று சிறப்புமிக்கவையாகும். ஸ்ரீ நகரை காப்பாற்ற 1947இல் படைவீரர்களுடன் டகோட்டா ஸ்ரீநகருக்கு பறந்தது. இல்லையென்றால் இப்போது ஸ்ரீநகர் இந்தியாவுடன் இருந்திருக்காது. இந்த விமானங்களை சீர் அமைப்பதற்கு ஆறு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இதில் எனக்கு நிறைய பணம் செலவாகி உள்ளது. ஆனால் நான் முக்கியமாக கருதுவது என் தந்தை மற்றும் அதில் பணியாற்றிய பலருக்கும் உந்துதல் அளித்துள்ளேன் என்பதை என்னி மகிழ்கிறேன். 1947 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை மற்றும் நாட்டின் ராணுவத்தின் துணிச்சலை நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இருந்தது. அந்த நோக்கத்திலேயே இந்த விமானங்களை நான் சீரமைக்க முயற்சித்தேன். இது காஷ்மீருடன் ஒருங்கிணைந்த இளம் சுதந்திர இந்தியாவை தக்கவைத்துள்ளது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் எம்கே சந்திரசேகரின் தந்தை இந்திய விமானப்படையில் டகோட்டா விமானியாக இருந்து ஓய்வுபெற்ற ஏர் கமாண்டர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறுசீரமைப்புக்கு பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு பரசுராம் என மறு பெயரிடப்பட்ட டகோட்டா காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானநிலையத்தில் வின்டேஜ் பிளேயில் சேர்க்கப்பட்டது. இது விண்டேஜ் கடற்படையின் மற்ற உறுப்பினர்களுடன் மீண்டும் முதல் முறையாக செயலாற்றியது.
அப்போது விமானங்களில் சிறப்புகளை பாராட்டிய அப்போதைய ஐஏஎஃப் தலைவர் பி.எஸ் தனோவா, இந்த விமானங்கள் 1930 களில் அறிமுகப்படுத்தப்பட்டன அப்போதைய ராயல் இந்திய விமானப்படையின் ஆர்.ஐ.ஏ.எஃப் 12வது படைப்பிரிவில் ஒரு பகுதியாக டக்கோட்டக்கள் முக்கிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. லடாக் மற்றும் வடகிழக்கு பகுதி, மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கை காப்பாற்ற அவைகள் 1947இல் கடுமையாக பணியாற்றியது என்றார்.
1971ஆம் ஆண்டு போரில் பெற்ற வெற்றியை குறிக்கும் வகையில் இந்த ஆண்டு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ்வுடன் ராஜதந்திரம் மற்றும் இந்தியாவின் பழைய உறவுகளை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் என மோடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.