ஸ்டாலின் கொரோனா... உதயநிதி உருமாறிய கொரோனா... போட்டுத் தாக்கும் வைகைச்செல்வன்..!

Published : Jan 22, 2021, 02:20 PM IST
ஸ்டாலின் கொரோனா... உதயநிதி உருமாறிய கொரோனா... போட்டுத் தாக்கும் வைகைச்செல்வன்..!

சுருக்கம்

மு.க.ஸ்டாலின் கொரோன , உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா என என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார்.   

மு.க.ஸ்டாலின் கொரோன , உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா என என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பல பேர் கட்சி தொடங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி கொண்டு இருக்கிறார்கள். கமலை மக்கள் நடிகராக மட்டும் தான் பார்ப்பார்கள். சட்டமன்ற தேர்தலை பிக்பாஸ் நிகழ்ச்சி என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமல் ஹாசனுக்கு விழாது. 

மு.க.ஸ்டாலின் கொரோன, உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா. பெண்களைப்பற்றி உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருகிறார். இதனை கேட்டுக்கொண்டு ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறார். வாக்காளரிடம் கடன் சொல்லியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் டி.டி.வி.தினகரன். அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளரிடம் ரூ.5 தருகிறேன் என்று சொல்லி கடன் வைத்திருக்கிறார். இன்னும் சிலரோ பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கட்டணம் கூட சிலர் கட்ட முடியாமல் கட்சியே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்’ என அவர் கடுமையாக விமர்த்தார். 


 

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?