அப்பா அரசியலில் ஜெயிக்கணும்! முதல்வராகணும்! அரசியல்வாதிகள் வழிபடும் பிரதான கோயிலில் ரஜினி மகள் பிரார்த்தனை!

Asianet News Tamil  
Published : Feb 03, 2018, 03:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
அப்பா அரசியலில் ஜெயிக்கணும்! முதல்வராகணும்! அரசியல்வாதிகள் வழிபடும் பிரதான கோயிலில் ரஜினி மகள் பிரார்த்தனை!

சுருக்கம்

Daddy to win politics Rajini daughter praying!

வழக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை பெறவும், பதவிக்காகவும் அரசியல்வாதிகள் செல்வதாக கூறப்படும் நெல்லை ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.

20 வருடங்களுக்கு மேலாக அரசியலுக்கு வருவார்... வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், ஒரு வழியாக கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி, தான் அரசியலுக்கு வந்து விட்டதாகவும், தனிக்கட்சி தொடங்கி வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார். மேலும் ரசிகர்களையும், மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் ”ரஜினி மக்கள் மன்றம்” என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பாக அரசியல் பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம், கீழப்பாவூரில் ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயிலில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா சிறப்பு வழிபாடு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயிலில், அரசியல்வாதிகள் அதிகமாக வழிபட்டு வருவார்கள். வழக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை பெறவும், பதவிக்காகவும் இங்கு சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

இந்த கோயில் பற்றி அறிந்த ஐஸ்வர்யா,  இரு தினங்களுக்கு முன்பு இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த அவர், கணவர் தனுஷ் மற்றும் தந்தை ரஜினிகாந்த் பெயர்களில் அர்ச்சனை செய்தார். 

இதற்குப் பிறகு, கோயில் வளாகத்தில் சிறிது நேரம் அமைதியாக இருந்து தியானம் செய்தார். இதன் பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதித்திருக்கும் நிலையில், ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயிலைப் பற்றி அறிந்த ஐஸ்வர்யா சிறப்பு வழிபாடுகள் செய்ததாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!