மதுரை அருகே அப்பா மது அருந்தியதால் மகள் தீக்குளிப்பு.. காப்பாற்றச் சென்ற அம்மாவையும் அப்பியது தீ.!!

Published : May 07, 2020, 10:19 PM IST
மதுரை அருகே  அப்பா மது அருந்தியதால்  மகள் தீக்குளிப்பு.. காப்பாற்றச் சென்ற அம்மாவையும் அப்பியது தீ.!!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.45 நாட்களுக்கு பிறகு மதுபானக் கடை திறக்கப்பட்ட முதல் நாளே ஆர்ப்பாட்டம் தடியடி தீக்குளிப்பு என பல சர்ச்சைகளை

T.Balamurukan

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்டு சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.45 நாட்களுக்கு பிறகு மதுபானக் கடை திறக்கப்பட்ட முதல் நாளே ஆர்ப்பாட்டம் தடியடி தீக்குளிப்பு என பல சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது தமிழகம்.
 
இது ஒருபுறமிருக்க, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெண்கள் மத்தியில் டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதுரை மாவட்டம் பைகாரா பகுதியில் டாஸ்டாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காளவாசல் பகுதியில் கணவன் மது அருந்தி வந்ததால் டாஸ்மாக் கடையை மூடப்பட வேண்டும் என்று பெண் ஒருவர் தன் பிள்ளைகளுடன் சாலை மறியலில் ஈடுப்பட்டார்.

இந்நிலையில், மதுரை அலங்காநல்லூர் அருகே கட்ட தொழிலாளியான சிவகுமரன் என்பவர் இன்று டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். தந்தை மது அருந்திவிட்டு வந்ததை கண்ட மகள் அச்சனா மனமுடைந்து தீக்குளித்தார். மகள் அச்சனாவை காப்பாற்றச் சென்ற தாய் பரமேஸ்வரியும் தீயில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்