டாஸ்மாக் பிரியர்களுக்கு தடியடி, டோக்கன், விபத்து என கலக்கியெடுத்திருக்கிறது டாஸ்மாக் சேல்ஸ்.!!

By Thiraviaraj RMFirst Published May 7, 2020, 9:37 PM IST
Highlights

டாஸ்மாக் கடை முன்பு திரண்ட குடிமகன்களை கட்டுப்படுத்த தடியடி மின்கம்பத்தில் மோதியது;டோக்கன் சிஸ்டம் என இன்று பட்டையை கிளப்பியிருக்கிறது டாஸ்மாக் கடைகளில் விற்பனை. இதோ எங்கே என்ன நடந்தது.வாங்க போகலாம்....

T.Balamurukan
டாஸ்மாக் கடை முன்பு திரண்ட குடிமகன்களை கட்டுப்படுத்த தடியடி மின்கம்பத்தில் மோதியது;டோக்கன் சிஸ்டம் என இன்று பட்டையை கிளப்பியிருக்கிறது டாஸ்மாக் கடைகளில் விற்பனை. இதோ எங்கே என்ன நடந்தது.வாங்க போகலாம்....

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிவடைவதற்கு முன் இன்று டாஸ்மாக் திறக்கப்பட்டது.டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வரும் ஒருவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எந்த ஆவணத்தை எடுத்து வர வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளித்திருந்தது டாஸ்மாக் நிர்வாகம். அதன் படி இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுவிற்பனை படுஜோராக நடைபெற்றது.தமிழகத்தில் நடந்த சில சம்பவங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

தேனிமாவட்டம்:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி ,கன்னியப்பபிள்ளைபட்டி, கதிர் நரசிங்கபுரம், கண்டமனூர், ஜி. உசிலம்பட்டி உள்பட 14 டாஸ்மாக் மதுக்கடைகள் படுகுஷியில் இயங்கியது.  இதில் ஜி உசிலம்பட்டி மதுபான கடை முன்பு காலை முதலே துண்டு போட்டும் கற்களை கொண்டும் குடிமகன்கள் இடம் பிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மது பாட்டில்கள் வாங்குவதற்கு ஆதார் அட்டையை ரேசன் அட்டை போல் பாதுகாப்பாக கையில் ஏந்தியபடி வரிசையில் நின்று சரக்கு வாங்கிச் சென்றனர்.நேரம் ஆகஆக மதிய நேரத்தில் கூட்டம் அலைமோதியது.வெயில் கொடுமை தாங்க முடியாமல் குடிமகன் முண்டியத்துக்கொண்டும். முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் கூட்டம் குவிந்ததால் அதிரடி படை வீரர்கள் வந்து தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.அதன் பிறகு டிஎஸ்பி சீனிவாசன் டாஸ்மாக் கடை முன்பு வந்து நின்று கொண்டு சமூக இடைவெளியோடு சரக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம்: "கடலூர் மாவட்டத்தில் உள்ள 134 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை காலை 10 மணி முதலே தொடங்கியது. கடலூர் பேருந்து நிலையம் அருகில்  அமைந்துள்ள இரண்டு கடைகளில் மாலை 5 மணிக்கு கடை அடைக்கப்படும் என்பதால் 4.45 மணிக்கு கூட்டம் அலைமோதியது. தேர்தல் நடைபெறும் போது வாக்களர்கள் வாக்களிக்க கடைசி நேரத்தில் குவிந்தால் டோக்கன் வழங்கப்படும். அதே போல் கடைசியாக இருந்தவர்களில் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டதுவர் 4.45மணிக்கு மேல் வந்தவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பட்டார்கள்.


கோவை: 
  குனியமுத்தூர் சாலை  ஆத்துப்பாலம் பகுதியில் குடி போதையில் சென்ற இளைஞர்கள் இரண்டு பேர் மோட்டார் பைக்கில் சென்றவர்கள் மின் கம்பத்தில் மோதி காயமடைந்திருக்கிறார்கள். 40 நாள் குடிக்காமல் இருந்த இந்த இளைஞர்கள் இன்று குடித்ததும் போதை தலைக்கேறியது. பைக் எப்படி எங்கே செல்கிறது என்று கூட தெரியாமல் மின்கம்பத்தில் மோதியிருக்கிறார்கள். படுகாயம் அடைந்த இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

இராமநாதபுரம் மாவட்டம்:
பரமக்குடி அருகே உள்ளது க.கருங்குளம் கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் இன்று ஒன்று கூடி டாஸ்மாக் கடையை திறக்காதே! திறக்காதே! என்று கோஷங்கள் எழுப்பியிருக்கிறார்கள்லஅவர்கள் எழுப்பிய கோஷங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை தீவிரமடைந்திருக்கிறது.தமிழக அரசு மது விற்பனைக்கு 5ஆயிரம் கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயம் செய்து மதுக்கடைகளை திறந்து விட்டிருக்கிறது. இந்த நிலையில் குடிமகன்கள் ஆதார் அட்டையை கையில் எடுத்து வந்து காட்டி மது வாங்குவதால் குடித்த பிறகு அட்டையை தொலைத்து விட்டு செல்கிறார்கள் என்பதற்காக ஆதார் அட்டை இல்லாமல் குடிமகன்களுக்கு மது வழங்க உத்தரவிட வேண்டும் என்று  தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனு மீதான விசாரணை மே14ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.


கொரோனாவை விட டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனைக்காக தமிழக அரசு துள்ளிகுதித்துக்கொண்டிருக்கிறது. கையில் காசு இல்லை: ஆனால் டாஸ்மாக் கடையில் 2கிமீ தூரம் வரிசையில் காத்திருக்கிறது வறுமையில் வாடும் மக்கள் சமுதாயம்.இந்த மக்களுக்காக வரிசை கட்டிஅடிக்கிறது போராளிகள் அரசியல்கட்சிகள் கூட்டம்.!?

click me!