"தமிழக அரசின் செயல்பாடுகளில் பாஜக தலையிடுவதா?" - கொந்தளிக்கும் டி.ராஜா

Published : Jun 03, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
"தமிழக அரசின் செயல்பாடுகளில் பாஜக தலையிடுவதா?" - கொந்தளிக்கும் டி.ராஜா

சுருக்கம்

d raja condemns bjp

தமிழக மக்களின் உணர்வுகளை பாதிக்கும் மத்திய அரசின் முடிவுகளில் மாநில அரசால்  அழுத்தம் கொடுக்க முடியாத அளவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 94 ஆவது பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற வைரவிழா இன்று மாலை சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக வட மாநிலங்களின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தியாகராயநகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அதிமுகவின் இரு அணிகளையும் பாஜக ஆட்டுவித்து வருவதாக தெரிவித்தார்.

தமிழக மக்களின் உணர்வுகளை பாதிக்கும் மத்திய அரசின் முடிவுகளில் மாநில அரசால்  அழுத்தம் கொடுக்க முடியாத அளவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது தமிழகத்தில் ஒரு நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் டி.ராஜா குற்றம் சாட்டினார். 

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!