பச்சோந்தி என்றால் ஓபிஎஸ் தான். அகராதியில் பச்சோந்தி என்ற வார்தையை எடுத்துவிட்டு ஓபிஎஸ் என வைத்துவிடலாம்.
ஓபிஎஸ் அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இல்லை. திமுக மீதும் கருணாநிதி மீதும் விசுவாசமாக இருப்பவர் என சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கு எதிராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக சார்பில் எம்.பி. சி.வி. சண்முகம் மனு அளித்துள்ளார். அதில், அதிமுக எம்.பி.யாக ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என கூறியிருந்தார்.
undefined
இதையும் படிங்க;- ஓ இதுதான் விஷயமா? ஓபிஎஸ் மீது அதிருப்தியில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்? ஜெயக்குமார் அதிர்ச்சி தகவல்.!
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவி. சண்முகம்;- அதிமுகவை பலவீனப்படுத்த திமுகவிடம் ஓபிஎஸ் விலை போய்விட்டார். பச்சோந்தி ஓபிஎஸ்.ஐ ஏவிவிட்டு அதிமுகவை பலவீனப்படுத்துவதே திமுகவின் திட்டம். அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம் என கூறினார்.
மேலும், ஓபிஎஸ் ஜெயலலிதாவின் விசுவாசி கிடையாது. ஓபிஎஸ் ஒரு களிமண். அவர் சசிகலா, தினகரனின் கைப்பாவையாக உருவாக்கப்பட்டவர். டிடிவி.தினகரன், சசிகலாவை கொலைக்காரர்கள் எனக் கூறியவர் ஓபிஎஸ். தற்போது அவருக்கு பதவி வெறி பிடித்துள்ளதால் அவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். டிடிவி.தினகரன் தனது சட்டையை பிடித்து ராஜினாமா செய்ய சொன்னார் எனக் கூறியவர் தான் ஓபிஎஸ். பதவி வெறியால் ஓபிஎஸ் பச்சோந்தி போல் செயல்பட்டு வருகிறார். அதிமுகவை பிளவுபடுத்த முயற்சித்தவர், சின்னத்தை முடக்கியவர் என கடுமையான விமர்சனங்களை சி.வி.சண்முகம் முன்வைத்தார்.
இதையும் படிங்க;- உருட்டுவது பூனைகுணம்! கெடுப்பது குரங்கு குணம்! கொல்வது முதலை குணம்! OPS-TTV சந்திப்பு! ஜெயக்குமார் விளாசல்.!
ஓபிஎஸ் அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாக இல்லை. திமுக மீதும் கருணாநிதி மீதும் விசுவாசமாக இருப்பவர். பச்சோந்தி என்றால் ஓபிஎஸ் தான். அகராதியில் பச்சோந்தி என்ற வார்தையை எடுத்துவிட்டு ஓபிஎஸ் என வைத்துவிடலாம். டிடிவி.தினகரன் ஓபிஎஸ் சந்திப்பால் எந்த தாக்கமும் இல்லை என சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.