தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், 3 மாவட்டங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் ஜூன் 28ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை மிகவேகமாக பரவியது. இதனால், கடந்த மே 24 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அடுத்தடுத்து மே 31, ஜூன் 7, ஜூன் 14-ம் தேதி என 3 கட்டமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தொற்று அதிகமாக இருந்த 11 மாவட் டங்களில் குறைவான தளர்வுகளும் மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அதிகமான தளர்வுகளும் அளிக்கப்பட்டன.
undefined
இந்நிலையில், கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மருத்துவ நிபுணர் குழுவினர், அரசு அதிகாரிகள், சிறப்பு பணிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, தற்போது தொற்று அதிகமாக உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அதிகம் வேண்டாம் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், 3 மாவட்டங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.