
கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் அவர்களை கரூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் ஆண்கள் 13, பெண்கள் 17, ஆண் குழந்தைகள் 4, பெண் குழந்தைகள் 5 பேர் உள்ளனர். இதில் ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. கரூர் பகுதியில் மட்டும் 27 பேர் உயிரிழந்தனர்.
கரூரில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் வைத்து தவெக தலைவர் விஜய் தனது கட்சி நிர்வாகிகள், சட்டப்பிரிவினருடன் இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதுகாப்பு கருதி நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை தந்துள்ளனர்.