
உலக சுகாதாரத்தினமான இன்று, தமிழ் நாட்டில் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய சோதனை, தொடர்ந்து நடை பெற்று வருகிறது .
சென்னை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள கல்லூரிகளில் கல்குவாரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .
திடீரென சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில், உலக சுகாதார தினமான இன்று சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்நிலையில், விஜயபாஸ்கரின் வீட்டின் வெளியில் நின்றிருந்த வெள்ளை சட்டை அணிந்திருந்த ஒருவர் திடீரென உள்நுழைய முயன்றார்.அப்போது காவல் பணியில் ஈடுபட்டு இருந்த துணை ராணுவ படை வீரர்கள் , அவரை விடாதே பிடி பிடி என துரத்தி சென்று அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .