"துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்" - துணை ராணுவ படை வீரர்களை மிரட்டிய தினகரன் ஆதரவாளர்கள்

 
Published : Apr 07, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
"துப்பாக்கியால் சுட்டுவிடுவேன்" - துணை ராணுவ படை வீரர்களை மிரட்டிய தினகரன் ஆதரவாளர்கள்

சுருக்கம்

dinakaran cadres threatening military

அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தொண்டர்களை வீட்டுக்குள் அனுமதியுங்கள் இல்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் என அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த துணை ராணுவப் படை வீரர்களை தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக வந்த புகாரையடுத்து தமிழக அமைச்சர் விஜய பாஸ்கரின் கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரின் வீட்டுன்முன்பு நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

அவர்களுடன் அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோரும் நுழைவாயிலை முற்றுகையிட்ட கட்சத் தொடர்க்ள் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு அவர்கள் கூச்சலிட்டனர்.

ஆனால் கேட் அருகே நின்றிருந்த துணை ராணுவப் படை வீரர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவிலை. இதனால் ஆத்திரமடைந்த தொணடர்கள், கதவைத் திறக்கவில்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் என துணை ராணுவப் படையினரை மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வீரர்கள் மேலும் காவலை பலப்படுத்தியுள்ளனர். ஆனாலும் தளவாய் சுந்தரத்தை மட்டுமே அவர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர் 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!