டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு… பயிர்ச்சேத விவர அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது குழு!!

By Narendran SFirst Published Nov 16, 2021, 1:24 PM IST
Highlights

மழை, வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத விவரங்களை பார்வையிட்ட ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேத விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளித்தனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து,  பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும். பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்தக் குழுவில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்த குழு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில், பயிர்ப்பாதிப்பு குறித்து ஆய்வு செய்தது. இந்நிலையில் மழை, வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத விவரங்களை பார்வையிட்ட ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேத விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளித்தனர். டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு பயிர் சேதம், கால்நடை இறப்பு உள்ளிட்டவற்றை  ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர் ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 17 லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் சம்பா சாகுபடி செய்துள்ள நிலையில், சுமார்  68 ஆயிரத்து 652 ஹெக்டர் விளைநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் இறப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவை குறித்தும் கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக மழையால் ஏற்பட்ட பயிர்சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.  கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் அப்போது 18 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 5 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கு தலா ரூ.2,10,000க்கான ஆணை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளாக கனமழையால் பசுமாடு இழந்தவர்களுக்கு தலா ரூ.30,000, கன்றுக்குட்டி இழந்தவர்களுக்கு தலா ரூ.16,000, பகுதியளவு கூரைவீடு சேதமடைந்தவர்களுக்கு தலா ரூ.4,100 என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரணத் தொகைகளை வழங்கினார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த நிலையில் மழை, வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத விவரங்களை பார்வையிட்ட ஐ.பெரியசாமி தலைமையிலான அமைச்சர்கள் குழு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேத விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளித்தனர்.

click me!