
பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதபட்டு இருக்கிறது. விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை என திரைப்பட நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசியுள்ளார்.
பாக்யராஜ் பேச்சால் சர்ச்சை
பிரதமர் மோடியின் ஆட்சியை கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று புத்தக வெளியிட்டு விழா ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். பிரதமர் மோடி, அம்பேத்கர் ஒப்பீடு குறித்த இளைராஜாவின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை அடங்குதவற்குள் பாக்யராஜ் பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நூல் வெளியிட்டு விழா
பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ்;- பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்
ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன். இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை. இக்கட்டான சூழல் வரும் போது சமாளிப்பது ரெம்ப ரெம்ப கஷ்டம். எப்படி சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. விமர்சனங்களுக்கெல்லாம் பிரதமர் மோடி செவி சாய்ப்பதில்லை என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- ஸ்ரீ மாரியம்மன் கோயில் சாமி ஊர்வலம்.. காரில் எதிரே வந்த தி.க தலைவர் கி.வீரமணி என்ன செய்தார் தெரியுமா?