கமலுக்கு புதிய "செக்"...! அரசியலுக்கு வரும் முன்னே இப்படியா ?  

Asianet News Tamil  
Published : Sep 22, 2017, 06:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
கமலுக்கு புதிய "செக்"...! அரசியலுக்கு வரும் முன்னே இப்படியா ?  

சுருக்கம்

created small touble to kamal before entering in politics

கமலுக்கு புதிய "செக்"...! அரசியலுக்கு வரும் முன்னே இப்படியா ?  

நடிகர்சங்கம் நடத்திய ஸ்டார் கிரிக்கெட் போட்டியில் ஊழல் நடந்திருபதாக நடிகர் வாராகி   ஏற்கனவே குற்றம் சாட்டி வந்தார்.  இந்த ஊழலில்  நடிகர் கமலுக்கும்  சம்மந்தம் இருப்பதை சுட்டி காட்டியுள்ளார்  வாராகி

அதாவது, சங்க கடன்களை அடைத்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட இந்த போட்டிநடத்தப்பட்டது. இதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கொடுக்கப்பட்ட உரிமம் உள்பட பல வற்றில் ஊழல்  நடைபெற்றதாக வாராகி தொடர்ந்து கூறி வந்தார்

ஆனால் போட்டி  தொடர்பான அனைத்து கணக்கு விவரத்தையும், தம்முடைய இணையதளத்தில்  வெளியிடப்படும் என நடிகர் சங்கம் தெரிவித்தது. ஆனால் அதில் விரிவாக ஏதும்குறிப்பிடவில்லை என தெரிகிறது. இதனையும் சுட்டிகாட்டினார் வாராகி

இதுதொடர்பாக முக்கிய கருத்தை வெளியிட்ட வாராகி நடிகர் கமல் குறித்து ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, நடிகர் சங்கம் மற்றும் நடிகர் சங்கஅறக்கட்டளை ஆகியவற்றிலிருந்து பணத்தை எடுத்து, ஸ்டார் கிரிக்கெட்டுக்கு செலவு செய்ததாக தெரிவித்தனர்.

அப்படி என்றால், நடிகர் கமல் உள்ளிட்ட அறங்காவலர்கள் கையெழுத்து இல்லாமல் எப்படி பணம்  எடுக்க முடியும் ? அவர்களின் கையெழுத்துடன் தான் பணம் எடுக்கப்பட்டதா என வாராகி கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் விசால், கமல்ஹாசன் ஆகியோர் மீது நட்சத்திர கிரிக்கட் ஊழல் சம்பந்தமான பத்திரிகையாளர் வராகி தொடர்ந்த வழக்கில் நடிகர்கள் கமல், விசால் , நாசர் உட்பட ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது

 

 

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!