அன்னைக்கு தொப்பியோட சுத்துன டீம்தானே நீங்க?: அமைச்சர்களை சீண்டும் சி.ஆர்.சரஸ்வதி.

 
Published : Dec 09, 2017, 08:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
அன்னைக்கு தொப்பியோட சுத்துன டீம்தானே நீங்க?: அமைச்சர்களை சீண்டும் சி.ஆர்.சரஸ்வதி.

சுருக்கம்

CR Saraswathi comments on ADMK Ministers

வெற்றியோ அல்லது தோல்வியோ கவலையில்லை. ஆனால் கடைசி நொடி வரை அ.தி.மு.க.வினரின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவது என்பதில் குறியாக இருக்கிறார் தினகரன். அவரது ஆதரவாளர்களும் இப்படித்தால் கிடைக்கும் சைக்கிள் கேப்பில் எல்லாம் டெம்போ டிராவலரே ஓட்டுகிறார்கள்...

அந்தவகையில் தினகரனின் ஆதரவாளனரான சி.ஆர்.சரஸ்வதி, “ஆர்.கே.நகர் தொகுதியில எங்களோட வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்குதுங்க. மக்களிடையே தினகரனுக்கு ஒரு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் அவர் மேலே ஈர்ப்பு இருக்குது. அதனால கவலையே இல்லை எங்களுக்கு. 

அ.தி.மு.க. அப்படிங்கிறது ஒற்றை தலைமையை கொண்ட ஒரு இயக்கம். இங்கே ரெட்டை தலைமைக்கெல்லாம் வேலையே இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அப்படின்னெல்லாம் அ.தி.மு.க. சட்ட விதியிலேயே கிடையாது. 

இரட்டை இலை நியாயப்படி எங்களுக்கு கிடைச்சிருக்கணும். ஆனா தேர்தல் ஆணையம் நியாயமா நடக்கலை. என்ன பண்றது? இவங்களுக்கு சாதகமா செயல்படுறாங்க. வானகரம் பொதுக்குழுவில் இவங்க தானே சின்னம்மாவை பொதுச்செயலாளரா தேர்ந்தெடுத்தாங்க? இன்னைக்கு  அப்படியே மாத்திட்டாங்க. 

விடுங்க, இவங்களைப் பத்தியெல்லாம் எங்களுக்கு கவலையே இல்லை. இன்னைக்கு தினகரனுக்கு எதிரா பேசும் அமைச்சர்கள் அன்னைக்கு தலை மறைய தொப்ப்பியை போட்டுக்கிட்டு அவருக்காக வீதி வீதியா அலையலையா? இவ்வளவு ஏன், எடப்பாடி பழனிச்சாமியும் தொப்பியை மாட்டிக்கிட்டு திரிஞ்சாரே! அன்னைக்கே தினகரனை வேண்டாமுன்னு சொல்லியிருக்க வேண்டிதானே?

இவங்களுக்கு பதவியும், பசையும்தான் முக்கியம். பன்னீர்செல்வத்துக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே தினகரன் தானே! எல்லாத்தையும் மறந்துட்டு திரியுறாங்க அவங்க. 

இன்னும் விட்டு வெச்சால் இந்த பினாமி ஆட்சின் கழகத்தையே முடிச்சுக் கட்டிடும். அதனாலதான் தினகரன் தீவிரமா  களமிறங்கிட்டார்.” என்று வெளுத்துக் கட்டியிருக்கிறார். 

சி.ஆர்.சரஸ்வதி, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களை சீண்டியதற்கு அங்கிருந்து என்ன பதிலடி வருதுன்னு பார்க்கலாம்!

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!