தமிழகம் ,கேரளாவில் ஆட்சியை கலைக்க திட்டம்.! பாஜகவின் ஹாட்ரிக் வெற்றி என்ற பகல் கனவு பலிக்காது- சிபிஎம்

By Ajmal Khan  |  First Published Sep 4, 2023, 10:48 AM IST

 பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில் பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் ஆட்சியை கலைக்க திட்டம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த சட்டமானவது புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுகின்ற சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் முடிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டுவரலாமா என்று மோடி அரசு யோசிக்கிறது. தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியை கலைத்து, 

பாஜக பகல் கனவு பழிக்காது

மாநில உரிமைகளுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை  நடத்த திட்டமிடுகிறார்கள்.  பொதுசிவில் சட்டத்திற்கும்  முயற்சிக்கிறார்கள். வரக் கூடிய நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர், இந்தி யாவிற்கு சோகமான, துயரமான வரலாற்றை நிறுவுகிற கூட்டமாக அமையப் போகிறது என்பதை பார்க்கிறோம். இப்படியான முயற்சிகளால் பாஜக அரசு தங்களை தக்க வைத்துக்கொள்வதோ, மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரப்போவதோ நடைபெறப் போவதில்லை.

அது பகல் கனவு என்பதை இந்திய நாட்டு மக்கள் நிரூபிப்பார்கள். ஏற்கெனவே பல மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில் பாஜகவின் தோல்வி மேலும் உறுதியாகியுள்ளது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

பாஜகவின் வெறுப்பு அரசியலால் இந்தியா பலியாகக்கூடாது... INDIA கூட்டணி இந்தியாவை காப்பாற்றும்- ஸ்டாலின் உறுதி
 

click me!