விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு டாக்டர்பட்டம் கொடுத்த தமிழக அரசு முடிவெடுத்த நிலையில், அதற்கான கோப்புகளில் ஆளுநர் ரவி கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சங்கரையாவிற்கு டாக்டர் பட்டம்
1922 ஜூலை 15ல் பிறந்த மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவரும், நூறு வயதைக் கடந்தவரும், ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், மாணவத் தலைவரும். சிறந்த சட்டமன்ற உறுப்பினருமான என். சங்கரய்யா அவர்கள், தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக,
undefined
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பாக சங்கரையாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கு தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சங்கரையாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் கோப்புகளில் கையெழுத்திட மறுத்துள்ளார்.
கையெழுத்திட மறுத்த ஆளுநர்
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா, படிப்பை பாதியில் கைவிட்டு விடுதலை போராட்ட களத்திற்கு வந்த போராளி. அவர் முடிக்க முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப் பட்டது. தமிழ்நாடு அரசும் அதனை ஏற்று டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்தது. மதுரை காமராஜர் பல்கலை கழகமும் அதனை முடிவு செய்து வரும் நவம்பர் 3 அன்று நேரில் வந்து பட்டம் தருவதாக இருந்தது.
விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள்
ஆனால் ஆளுநர் அதற்கு கையெழுத்திட மறுத்து நிறுத்தியுள்ளார். விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என்.சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள். அவரால்தான் பட்டத்திற்கு பெருமை என்பதை உணராத கூட்டம்தான், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்பது இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்