சனாதானத்தை சொல்லப்படுகிற குல தொழிலை கடைப்பிடிக்கிற ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். அமைச்சராக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் சனாதனத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை.
திமுக எம்.பி.க்களில் ஒருவர் கூட காவிரி பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பேசாதது ஏன்? என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பேசுகையில்;- இந்த திமுக ஆட்சியில் மின்சார கட்டணம் இரண்டாவது முறையாக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பால், காய்கறி, அரிசி என அனைத்து பொருட்களும் சாலை, வாகனம் என அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டன. குப்பைக்கு கூட வரி போட்ட குப்பை முதலமைச்சர் தான் ஸ்டாலின். சொன்னதையும் செய்யவில்லை வாக்குறுதிகள் நிறைவேற்றுப்படவில்லை நிர்வாகம் சீர்கெட்டுவிட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க;- உங்க தாத்தாவையே பாத்தவங்க நாங்க! உதயநிதி இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்! சீறும் சி.வி.சண்முகம்..!
பிரச்சனை திசை திருப்ப சனாதானத்தை கையில் எடுத்துள்ளது திமுக. அரவேக்காடு சனாதானத்தை ஒழிப்பதாக கூறி இந்து மதத்தை பற்றி இழிவாக பேசி வருகிறார் உதயநிதி. சனாதானத்தை சொல்லப்படுகிற குல தொழிலை கடைப்பிடிக்கிற ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். அமைச்சராக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் சனாதனத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை. இந்துக்கள் ஓட்டை வாங்கி கொண்டு இந்துக்களையே திட்டுகிறார் என சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் பேசிய அவர் நாங்கள் தான் அமலாக்கதுறையை அனுப்பியுள்ளோம். விரைவில் இந்த ஆட்சி கலைக்கப்படும். இந்த ஆட்சியில் அரசு ஊழியருக்கு கூட சம்பளம் போட காசு இல்லை. ஆனால் இவர்களிடம் மட்டுமே கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. விரைவில் இந்த பித்தலாட்ட ஆட்சி காலி ஆகிவிடும். பித்தலாட்டம், மோசடி, மக்களை ஏமாற்றுகிற இந்த அரசு அகற்றப்பட வேண்டும். மக்களுக்கு உழைக்கிற கட்சி அதிமுக. மக்கள் இழந்த உரிமைகளை பெற்று தருகிறவர் எடப்பாடியார் மட்டும் தான். நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டலும் மக்களுக்காக போராடுகிற சின்னம் இரட்டை இலை சின்னம் என்றார். திமுக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து போய் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. திமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி வாசல்களில் கஞ்சா, போதை மாத்திரை, போதை சாக்லெட் தங்கு தடையின்றி கிடைக்கிறது என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் ஸ்டாலினுக்கு பயம் வந்துடுச்சு.. எடப்பாடி பழனிசாமி விளாசல்.!
திமுக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து போய் உள்ளது. சொன்ன இடத்தில் கையெழுத்து போடுகிற ரப்பர் ஸ்டாம்ப் தான் திமுக அமைச்சர்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சி கட்டிலில் அமர்கிறதோ தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. திமுக எம்.பி.க்களில் ஒருவர் கூட காவிரி பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் பேசாதது ஏன்? காவிரி பிரச்சனைக்காக 22 நாள் நாடாளுமன்றத்தை முடக்கியது அதிமுக. நாடாளுமன்றத்தை ஒருநாள் முடக்க திமுக எம்.பி.க்களுக்கு தைரியம் உள்ளதா? சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர்கள் இறப்பதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் காங்கிரஸ், பாஜக, திமுக தான் காரணம். தமிழை ஆட்சி மொழியாக்க 10 ஆண்டுகளாக பாஜகவும், மோடியும் எதுவும் செய்யவில்லை. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என ஸ்டாலினால் கூறமுடியுமா? என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.