கன்னத்தைத் தொடுவது...! அழகா இருக்கேன்னு சொல்றது இதுவும் பாலியல் தொல்லைதான்...! வாசுகி வேதனை

First Published May 21, 2018, 1:05 PM IST
Highlights
CPM Committee member Vasuki Pressmeet


அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், சிறுமிகள் பாலியல் கொலைகள் குறித்த ஆய்வறிக்கையை ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி இன்று வெளியிட்டார்.

மார்க்சிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவருமான வாசுகி இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

இந்த சந்திப்பின்போது வாசுகி, அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல துன்புறுத்தல்கள், சிறுமிகள் பாலியல் கொலைகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. இந்த விவகாரத்தில்
மாணவிகளே பலிகடாவாகி உள்ளனர். வெளியில் வந்து சொன்ன மாணவிகள் புத்திசாலிகள் என்றும் அவர் கூறினா.

இந்த வழக்கு வந்தவுடனேயே சிபிசிஐடி இயக்குநர் மாற்றப்படுகிறார் என்றால், இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் நீதிமன்ற மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தை நாடி, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வலியுறுத்த இருப்பதாகவும் கூறினார். பெண் செய்தியாளர்களுக்குக்கூட இங்கு பாலியல் வன்கொடுமை உள்ளது. ஆளுநர் கன்னத்தைத் தொடுவதும், அமைச்சர் விஜயபாஸ்கர், நீங்க அழகாக இருக்கீங்க... உங்க கண்ணாடி அழகாக இருக்கு.. என்று சொன்னதும்கூட பாலியல் தொல்லையேதான் என்று வாசுகி கூறினார்.

click me!