ஜெயலலிதா சொன்னது என்னாச்சி..!! லோக்கல்பாடிக்கு முன்னாடி எடப்பாடிக்கு சொக் வைக்கும் மாநிலச் செயலாளர்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2019, 12:52 PM IST
Highlights

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2016 சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் அறிக்கை வெளியிடும் பொழுது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை கொடுத்துத்தான் தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெற்றார். 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தனியார் மஹாலில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் இரண்டாவது நாளாக  நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, காலி பணியிடங்களை நிரப்ப, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட என 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  மாநாட்டின் முக்கிய கோரிக்கை பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2016 சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் அறிக்கை வெளியிடும் பொழுது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை கொடுத்துத்தான் தேர்தல் களத்தில் நின்று வெற்றி பெற்றார். தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெயலலிதா வழியில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசாங்கத்தின்  நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் ஏராளமான பணியிடங்கள் காலியாக இருக்கிறது ஏறத்தாழ 5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கிறது.

தமிழ் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எவ்வளவு தூரம் விஸ்வரூபமெடுத்து இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் எனவே பணியிடங்களையும் நிரப்பி வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். காலி இடங்களை நிரப் பாத காரணத்தினால்  பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து பலர் பலவிதமான பாதிப்புக்குள்ளாகி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு என்பது ஒரு தனியார் துறை நிறுவனம் அல்ல ஆனால் தனியார் துறையை காட்டிலும் மிக மோசமாக ஊழியர்களை ஆசிரியரை மற்றவர்களது செயல்படுத்துகிறது. 

ஒப்பந்த ஊழியர்களை ஒப்பந்த தொழிலாளர்கள் வைத்துக் கொள்வதுடன் ஒப்பந்த ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியம் போன்றவை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவையெல்லாம் மாற்றியமைக்கப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் முன்வைத்திருக்கிறார் பல்வேறு கோரிக்கைகள் மிக முக்கியமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தால் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கங்கள், இதர சங்கங்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ என்கின்ற அமைப்புகள் கலந்து பேசி கோரிக்கைகள் வைத்துள்ளனர்.முதலமைச்சர் மற்றும் அரசு வாக்குறுதி கொடுத்திருக்கிறது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் அவர்கள் கூடி போராட்டம் அறிவிப்பார்.

click me!