தில்லாக, தைரியமாக, பாகிஸ்தானை ஆதரித்து பேசிய தமிழக மூத்த தலைவர்..!! மோடியையும் காய்ச்சினார்..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2019, 12:57 PM IST
Highlights

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி பிரச்சினை இருந்து வருவதுபோல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்  இடையில் பல ஆண்டுகளாக சிந்து நதி நீர் பிரச்சனை இருந்து வருகிறது. அந்நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்கு நீடித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என தெரிவித்துள்ளார்.  

நதி அனைவருக்கும் பொதுவான சொத்து என்ற நிலையில், சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பாகிஸ்தானுக்கு தரமாட்டோம் என இந்திய பிரதமர் மோடி சொல்வது  எதேச்சதிகாரம் என, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே காவிரி பிரச்சினை இருந்து வருவதுபோல, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்  இடையில் பல ஆண்டுகளாக சிந்து நதி நீர் பிரச்சனை இருந்து வருகிறது. அந்நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிணக்கு  நீடித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகள் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆதரித்து  பிரச்சாரம் செய்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ஆர். நல்லகண்ணு திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது பேசிய  அவர்,  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல இடைத்தேர்தலிலும் வெற்றி பெறும் என்றார். மத்திய அரசு  ரயில்வே, பாதுகாப்பு , உள்ளிட்ட துறைகளில் தனியாரை அனுமதிக்கும்  முயற்சித்து வருகிறது என கூறி அவர்,  அதை கண்டித்து வரும் ஜனவரி 8 ஆம் தேதி நாடுதழுவிய அளவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்றார்.  பொறியியல் மாணவர்கள் பகவத்கீதையை  கட்டாயமாக படிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் தெரிவித்தனர். பின்னர் அனைத்து கட்சிகளும் எதிர்த்த நிலையில், விருப்பப் பாடமாக படிக்கலாம் என்கின்றனர் என்றார்.  மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபட்டு வருகிறது என்ற நல்லகண்ணு,  மணல் கொள்ளை, மதுபானக்கடைகள் மூலம் வருமானம் பெறுவதை கொள்கையாக வைத்துள்ளது என்றார்.

 

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல்  சொத்து வரி, மற்றும் குடிநீர் கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியுள்ளது என்ற அவர்,  அதிமுக ஆட்சி நீடித்தால், தமிழ்நாட்டுக்கு எல்லா விதத்திலும் பாதிப்பு என கூறினார். சிந்து நதியை இரு நாட்டிற்கும் பொதுவானதாக கருத வேண்டுமே தவிற, அதிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டேன் என பிரதமர் மோடி பேசியிருப்பது சரியானதல்ல என அவர் தெரிவித்தார்

click me!