அதிமுக ஆட்சியில் காவல்துறையில் மெகா ஊழல்.. வாக்கி டாக்கி, சிசிடிவி கேமராக்கள் வாங்கியதில் முறைகேடு அம்பலம்.!

By vinoth kumarFirst Published Aug 20, 2021, 3:33 PM IST
Highlights

2015ம் ஆண்டு போலீசாருக்கான ரேடியோ, வாக்கி டாக்கி, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் கொள்முதல் மற்றும் அதற்கான டெண்டரில் பெரும் முறைகேடு நடந்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் போலீசாருக்கான தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2015ம் ஆண்டு போலீசாருக்கான ரேடியோ, வாக்கி டாக்கி, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் கொள்முதல் மற்றும் அதற்கான டெண்டரில் பெரும் முறைகேடு நடந்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 

அதில், தொழில்நுட்ப பிரிவு முன்னாள் எஸ்.பி.அன்புச்செழியன் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் கூடுதல் டிஎஸ்பி ரமேஷ் ஆகியோர் இணைந்து சென்னையை சேர்ந்த வி.லிங்க் என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக ஆவணங்களை தயாரித்து கொடுத்து டெண்டர்களை பெற உதவியதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. இந்த முறைகேட்டிற்கு 14 போலீசாரும், 2 தனியார் நிறுவனங்களும் உடந்தையாக இருந்துள்ளதும் லஞ்ச ஒழிப்புத்துறை எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2015-16ம் ஆண்டு கணினிகளுக்கான மோடம்களுக்கான டெண்ரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஒரு கோடி 74 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2016-17ம் ஆண்டில் மற்றொரு ஒப்பந்தத்தில் அன்புச்செழியனும், ரமேசும் இணைந்து 76 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018-19ம் ஆண்டில் 129 சிசிடிவி கேமராக்கள் கொள்முதல் செய்ய விலிங்க் நிறுவனத்திற்கு இருவரும் உதலியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

2017ம் ஆண்டு அன்புச்செழியன், ரமேஷ் ஆகியோர் விலிங்க் நிறுவனத்திற்கு 3 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,767 டேப்லெட்டுகள், கணினிகள் 1,299 5ஜி டேட்டா கார்டு கொள்முதலுக்கான டெண்டர் பெற உதவினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை அடுத்து அரசு டெண்டர் கோர விலிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 நிறுவனங்களின் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அன்புசெழியன் உள்ளிட்ட 14 காவல் அதிகாரிகளும் தொடர்ந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

click me!