ஊழலும் திமுகவும் வேறு வேறு அல்ல.. ஸ்டாலின் பகல் கனவுகாண வேண்டாம்.. ஓபிஎஸ் அதிரடி சரவெடி டுவிட்.

Published : Feb 15, 2021, 11:30 AM IST
ஊழலும் திமுகவும் வேறு வேறு அல்ல.. ஸ்டாலின் பகல் கனவுகாண வேண்டாம்.. ஓபிஎஸ் அதிரடி சரவெடி டுவிட்.

சுருக்கம்

ஊழலும் திமுகவும் வேறு வேறு அல்ல என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும்,  இரட்டை இலை மீண்டும் மீண்டும் துளிர்ப்பதை தீய சக்திகளால் ஒருபோதும் தடுக்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.  

ஊழலும் திமுகவும் வேறு வேறு அல்ல என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும்,  இரட்டை இலை மீண்டும் மீண்டும் துளிர்ப்பதை தீய சக்திகளால் ஒருபோதும் தடுக்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது:  இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. 

 

 

தாய்த்திரு நாட்டிற்கும், தமிழ் நாட்டிற்கும் உலக அரங்கில் பெரும் அவமானத்தையும், அரசுக்கு மாபெரும் இழப்பையும் தேடித்தந்த 2ஜி இமாலய அலைக்கற்றை ஊழல்,  வீராணம் ஊழல், பூச்சிமருந்து ஊழல், கூவம் நதி ஊழல் என எண்ணிலடங்கா ஊழல்களை விஞ்ஞான ரீதியில் புரிந்த திமுக ஊழலின் ஊற்றுக்கண் என்பதை உலகம் அறிந்த ஒன்று. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் திமுகவின் ஊழல்களை மக்கள் மறப்பர் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் ஸ்டாலின். 

ஊழலால் புரையோடிப்போன திமுகவின் கறைபடிந்த ஆட்சியை அகற்ற தான் தமிழக மக்கள் எங்களோடு கை கோர்த்து உங்களை வீட்டிற்கு அனுப்பினர் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம், ஊழலும் திமுகவும் வேறு வேறு அல்ல என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள், இரட்டை இலை மீண்டும் மீண்டும் துளிர்ப்பதை தீய சக்திகளால் ஒருபோதும் தடுக்க முடியாது, இவ்வாறு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!