காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது... பதற்றம்... போலீஸ் குவிப்பு..!

By vinoth kumarFirst Published Feb 15, 2021, 11:17 AM IST
Highlights

ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது  செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயங்கொண்டம் பகுதியில் தங்களது அமைப்பின் கொடியை ஏற்றச் சென்ற காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் கைது  செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயங்கொண்டத்தை அடுத்த கரடிக்குளத்தில் மாவீரன் மஞ்சள் படையின் கொடியை ஏற்ற, அந்த அமைப்பின் தலைவரான காடுவெட்டி குரு மகன் கனலரசன் தனது ஆதரவாளர்களுடன் நேற்று புறப்பட்டார். அப்போது, சட்டம், ஒழுங்கு பாதிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடி ஏற்ற வந்த கனலரசன் உட்பட 36 பேரை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனிடையே, மாவீரன் மஞ்சள் படை அமைப்பினர் கொடி ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து, பாமக மாநில துணை பொதுச் செயலர் திருமாவளவன் தலைமையில் பலர், ஜெயங்கொண்டத்தில் மறியலில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தடையை மீறி ஒன்று கூடியதாக திருமாவளவன் உட்பட 16 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

click me!