#BREAKING தேர்தலுக்கு தயாரான அதிமுக... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Feb 15, 2021, 11:00 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் முதல் மார்ச் 5ம் வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தலைமைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ம் முதல் மார்ச் 5ம் வரை விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தலைமைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே அதிமுக, திமுக கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த தேர்தல்களில்  விரும்ப மனுவாகட்டும் மற்றும் வேட்பாளர் அறிவிப்பாகாட்டும் எப்போதும் அதிமுக முதல் நபராகவே இருந்து வருகின்றனர். அதேபோல், இந்த முறையும் முதல் கட்சியாக விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சியினர், தலைமைக்கழகத்தில் வரும் 24 புதன்கிழமை முதல் மார்ச் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு விண்ணப்பக் கட்டணத் தொகையை செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக்கழகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விருப்ப மனுவுக்கு தமிழகத்தில் ரூ.15,000, புதுச்சேரியில் ரூ.5,000, கேரளத்தில் ரூ.2,000 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

click me!