அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதி! திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா செந்தில் பாலாஜி? பாஜக

By vinoth kumar  |  First Published Jun 15, 2023, 12:08 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதில் பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக  மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  ஈடுபட்டுள்ளது. 


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம்சாட்டியது.  உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வாழ்க்கை விசாரித்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்து அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!

இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களே வலியுறுத்தினார். மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பாஜக அரசு, சட்டத்தின்படியே, அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், இதில் பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக  மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  ஈடுபட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. 

இதையும் படிங்க;-  ஆஸ்கார் விருது கொடுத்தால் இந்தாண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கலாம்..! கிண்டலடிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகி விட்டாரா? திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவராகி விடுவாரா? செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது.

இதையும் படிங்க;-   தமிழக அரசை மிரட்டி பார்க்க நினைக்கிறீங்களா! உங்க பாச்சா இங்க பலிக்காது! பாஜகவை திருப்பி அடிக்கும் வேல்முருகன்

அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனுமதிக்காது. ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் உணர வேண்டும் என வானதி சீனிவாசன் லுறியுள்ளார். 

click me!