பொய்யான அறிக்கைவிட்டு சொதப்பிய தேமுதிக.. கேப்டன் உடல் நிலை பற்றி மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 24, 2020, 12:17 PM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் விஜயகாந்த் தவிர்த்து வந்தார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, விஜயகாந்துக்கு கொரோனா பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால், தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, தேமுதிக தலைமைக்கழகம் அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில்,கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்லது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியிட்ட சில மணிநேரங்களிலேயே விஜயகாந்த் உடல்நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

 அதில், தேமுதிக  தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. விஜயகாந்த் முழுமையாக குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே தலைமைக்கழகம் கொரோனா இல்லை வெளியிட்டிருந்த நிலையில் மருத்துவமனை கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

click me!