சமீப காலமாக இந்தியா முழுவதிலும் H2N3 என்று சொல்லக்கூடிய வைரஸ் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த வாரம் ஐசிஎம்ஆர் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று அறிவுறுத்தலை வெளியிட்டது.
தமிழகத்தில் பெரிய அளவில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பதால், மக்கள் பதற்றப்பட வேண்டாம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சமீப காலமாக இந்தியா முழுவதிலும் H2N3 என்று சொல்லக்கூடிய வைரஸ் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த வாரம் ஐசிஎம்ஆர் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று அறிவுறுத்தலை வெளியிட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை. 200 வார்டுகளில் 200 காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 1000 இடங்களில் திட்டமிடப்பட்டிருந்தாலும் இன்று ஏறத்தாழ 1300 இடங்களில் இந்த முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 11,333 மருத்துவ கட்டமைப்புகளில் துணை சுகாதார நிலையங்களை தவிர்த்து ஆரம்ப சுகாதார நிலையங்கள். நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டம் சாரா அரசு மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகள். மாவட்ட அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என்று அனைத்து இடங்களிலும் இந்த காய்ச்சலுக்கு உண்டான மருந்துகள் கையிருப்பில் உள்ளதை உறுதிப்படுத்துகின்ற வகையில் இயக்குநரகத்தின் மூலம் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
undefined
அனைத்து மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. தற்போது இந்த காய்ச்சல் பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை. மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கின்ற சூழலும் தற்போது இல்லை, எனவே பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. காய்ச்சல் உடல்வலி சளி இருமல் தொண்டை வலி பதிப்பு ஏற்பட்டவர் சிகிச்சை பெறவும். இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையான தாக்கம் கூடிக் கொண்டிருக்கிறது. தினசரி 20 முதல் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தினசரி ஏற்படுகிறது.
ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின் படி இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க. பாதிக்கப்படும் நபர்கள் 4 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைபடுத்திக் கொண்டால் குணமடையலாம். மேலும், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தாலே இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சத்து மாத்திரை தந்துள்ளார்கள். அங்கு ஆசிரியர்கள் மொத்தமாக மாத்திரைகளை வழங்கியுள்ளனர். உயிரிழந்த குழந்தை 70 மாத்திரை சாப்பிட்டுருக்கிறார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.