கொரோனா தொற்று இப்ப எங்களுக்கு இல்ல, மார்தட்டிக்கொள்ளும் சீனா. உலக பொருளாதாரத்தை சிதைக்க கொரோனாவை ஏவியது யார்?

By Thiraviaraj RMFirst Published Apr 26, 2020, 9:13 PM IST
Highlights

சீனாவில் வுகான் நகரை உலுக்கியது கொரோனா. சீனாவில் வுகான் நகரை தவிர மற்ற நகரங்கள் எல்லாம் பாதுகாப்பாகவும்,வர்த்தகங்கள் எந்த தடையும் இல்லாமல் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. சீனா பொருளாதாரத்தில் நாட்டாமை பண்ணவே இதுபோன்ற செயலில் இறங்கியிருக்கிறது

T.Balamurukan
2019ம் டிசம்பர் மாதம் உலகத்தையே உலுக்க போகும் கொரோனா வைரஸ் பூதம் சீனாவில் இருந்து கிளம்பும் என்று எந்த நாடும் நினைக்கவில்லை. மெல்ல மெல்ல சீனாவில் இருந்து உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கிறது.இத்தாலியை குறிவைத்த கொரோனா,அமெரிக்காவை அடியோடு காலிசெய்யது கொண்டிருக்கிறது.சீன மக்கள் தொகைக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவிலும் கொரோன கொடூரம் தலைவிரித்தாட ஆரம்பித்திருக்கிறது.

 சீனாவில் வுகான் நகரை உலுக்கியது கொரோனா. சீனாவில் வுகான் நகரை தவிர மற்ற நகரங்கள் எல்லாம் பாதுகாப்பாகவும்,வர்த்தகங்கள் எந்த தடையும் இல்லாமல் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. சீனா பொருளாதாரத்தில் நாட்டாமை பண்ணவே இதுபோன்ற செயலில் இறங்கியிருக்கிறது என்று உலக நாடுகள் குற்றம் சுமத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில்,  சீனாவில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் 84சதவீதம் வுகான் நகரில் ஏற்பட்டவைதான். 

இந்த நிலையில்,  சீனாவின் வுகான் நகரம் இன்று கொரோனா இல்லாத நகரமாகிவிட்டது. புதிய தொற்றுக்கள் இல்லை, அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. வுகானில் 50,333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். வுகான் நகரில் மட்டும் கொரோனாவுக்கு ஏற்பட்ட பலி எண்ணிக்கை  3869 ஆக இருந்தது. கொரோனா பரவத்தொடங்கியதும் வுகான் நகர் முழுமையாக முடக்கப்பட்டது. சீனாவின் மருத்துவ கட்டமைப்புகள் கொரோனா குறைவுக்கு ஒருவகையில் காரணம். உலக நாடுகளுக்கே சீனாதான் மருந்துவ உபகரணங்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் பிறப்பிடத்தில் பலி எண்ணிக்கை குறைவு,அமெரிக்காவில் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு பலி ஏற்பட்டிருக்கிறது. 
 

click me!