நடிகை காஜல் அகர்வாலுக்கு கொரோனா கற்று தந்த பாடம் என்ன தெரியுமா?

Published : Apr 26, 2020, 08:09 PM IST
நடிகை காஜல் அகர்வாலுக்கு கொரோனா கற்று தந்த பாடம் என்ன தெரியுமா?

சுருக்கம்

எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் கொரோனா எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் பணம் எவ்வளவு இருந்தாலும் மன அமைதி தான் முக்கியம். பணம் முக்கியம் அல்ல; என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது என்று பிரபல சினிமா நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

T.Balamurukan

"தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கொரோனா குறித்து அளித்த பேட்டியில்..., "தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கொரோனா குறித்து அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது.."நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் கடைசியாக மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையானது மன அமைதி மட்டும்தான். அது இருந்தால் வேறு எதுவும் இல்லாமல் போனாலும் பரவாயில்லை என்று இந்த கொரோனா காலத்தில் எல்லோருக்கும் புரிந்து இருக்கும். எனது சின்ன வயதில் நான் கூட எல்லா வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்கிறவர்களை பார்க்கும்போது நாமும் இப்படி வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்ள ஆரம்பித்த பிறகு மன அமைதியை தவிர முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாக புரிந்துள்ளது. எந்த மாதிரியான நெருக்கடியும் இல்லாமல் அமைதியாக இருக்கத்தான் நான் விரும்புகிறேன். எவ்வளவு பணம் இருந்தாலும் அமைதி இல்லாமல் போனால் என்ன பயன்? இப்போது கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை விட மன அமைதி முக்கியம் என்பது எல்லோருக்குமே புரிந்து இருக்கும் என்று கூறியுள்ளார்."

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!