கொரோனா தடுப்பு அவசரகால நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு... மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

Published : Apr 22, 2020, 04:23 PM ISTUpdated : Apr 22, 2020, 04:24 PM IST
கொரோனா தடுப்பு அவசரகால நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு...  மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

சுருக்கம்

கொரோனா பாதிப்பு அவசரகால நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு பரவல் தடுப்புக்காக நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி மாலை முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. 

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தற்போதைய சூழல் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மிக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இதில்,  தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அவசரகால நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதலில் ரூ.7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை 1-4 வருடங்களுக்கு பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதியானது கொரோனா தடுப்பு பணிகளில் முகக்கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளன. இதயைடுத்து, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான  உபகரணங்கள் உள்பட கொரோனா தடுப்பு பணிக்குத் தேவையான அனைத்தும் இதன்மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!