சென்னையில் கொரோனா சிகிச்சை... பிரபல தமிழ் நடிகர் பேரதிர்ச்சி..!

By Thiraviaraj RMFirst Published Jun 8, 2020, 11:34 AM IST
Highlights

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்ற தனது நண்படுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக பிரபல நடிகர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்ற தனது நண்படுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக பிரபல நடிகர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகர் வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தததாகவும், இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். கொரோனா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்கு செல்ல, முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை எனவும், அழைத்துக் கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது எனவும் மருத்துமனை நிர்வாகங்கள் தெரிவித்ததாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனைகளின் ஓனர், எம்டி என அனைவரிடம் பேசினாலும் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ''அவருக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரிவில்லை, காரணம் அவர் மிகவும் ஒழுக்க வழிமுறைகளை கடைபிடிப்பவர். அதன் காரணமாக நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நம்பிக்கையில் வெளியில் சுற்றாதீர்கள். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் செல்லுங்கள். அப்பொழுதும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அரசின் நடைமுறைகளை கடை பிடியுங்கள்'' என கேட்டுக்கொண்டார்.

திரு.வரதராஜன் கூறியுள்ளதுதான் தற்போதைய தமிழகத்தின் வருந்தத்தக்க நிலை. தமிழக அரசாங்கம் உடனடியாக வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது என்னுடைய அன்பு கோரிக்கை pic.twitter.com/l2W7xtyLJN

— Arjunamurthy Ra (@RaArjunamurthy)

click me!