உ.பி யில் .கொரோனா ஊரடங்கால் பாதித்து சாப்பாட்டுக்கு வரிசையில் கையேந்திய பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த இளைஞர்.!!

By T BalamurukanFirst Published May 25, 2020, 8:35 PM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் லலித் பிரசாத் என்ற வியாபாரியிடம் டிரைவராக  அனில்ஊரடங்கு நேரத்தில் தினந்தோறும் பிச்சை எடுத்த தன் தாயை காப்பாற்றி வந்த பெண்னை கல்யாணம் செய்து கொண்டார். காதலுக்கு கண் இல்லை என்றாலும் பிறர் சோகத்தை கேட்கும் போது எவ்வளவு பெரிய கல்நெஞ்சம் கொண்டவரையும் மனிதாபிமானம் உள்ளவராக மாற்றி விடும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு.
 
கொரோனா கல்யாணம் குறித்து அனில் கூறும் போது...."
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் தெரு ஓரங்களில் வசிப்பவர்கள் கஷ்டப்படுவதை அறிந்த வியாபாரி லலித் பிரசாத் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க தொடங்கினார்.அப்போது கான்பூர் நகரில் பல்வேறு தெருக்களுக்கும் அவர் தனது டிரைவர் அனிலுடன் சென்று உணவு வழங்கினார்.அந்நேரத்தில் டிரைவர் அனிலும் உணவு பொட்டலங்களை எடுத்துச்சென்று கொடுப்பது உண்டு.

தினமும் அவர் குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஒரு இளம்பெண் தனது தாயுடன் வந்து உணவு பொட்டலங்கள் வாங்கிச் செல்வதை கவனித்த அனில் அந்த பெண்ணிடம் அவர் ஏன் பிச்சை எடுத்து கஷ்டப்படுகிறீர்கள். என்ன நடந்தது என்று விசாரித்தேன். அப்போது அந்த பெண் தனது பெயர் நீலம் என்றும், தனது தந்தை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் தனது சகோதரர் தன்னை வீட்டில் இருந்து விரட்டி விட்டதாக சொன்னார் .அப்போது என் மனசு சுக்குநூறாக வெடித்துப்போனது.இதனால் தாயுடன் வெளியேறிய அவர் பிழைப்பதற்கு வேலை எதுவும் கிடைக்காததால் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கண்ணீர் விட்டார். இந்த சம்பவத்தை என் முதலாளி லலித் பிரசாத்திடம் சொன்னேன்.அதோடு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னேன். அவரும் என் திருமணத்தை நடத்தி வைப்பதற்கு சந்தோசம் தெரிவித்தார்.
 
click me!